Tuesday, 28 November 2017

அல் குர்ஆன்










அல் குர்ஆன்

குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு சுமார் 23 வருடங்களாக வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் மூலம் அருளப்பட்ட வேத வசனங்களாகும்.

அல் குர்ஆனில் 114 அத்தியாயங்களும் 6666 வசனங்களும் உள்ளன. அல் குர்ஆனிலே அல்லாஹ்வின் பேராற்றல், மனித குலத்திற்கான வழிகாட்டல்கள், எச்சரிக்கைகள், வரலாற்று நிகழ்வுகள் போன்றன பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

அல் குர்ஆன் முஸ்லிம்களுக்கான வழிகாட்டி மட்டுமல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் தேவையான வாழ்க்கை வழிக்காட்டல்கள் அல் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.

இவ்வேத வசனங்கள் அல்லாஹ்வினால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு சுமார் 23 வருடங்களாக சிறிது சிறிதாக அருளப்பட்டன. அவை அருளப்பட்ட சமயத்திலே அவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களாலும் ஸஹாபாக்களாலும் (நபித்தோழர்களாலும்) உடனுக்குடன் மனனம் செய்யப்பட்டன. இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அறிவுரையின்படி குறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. பிற்காலத்தில், ஹஸ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில் இந்நூல் நூல் வடிவில் அச்சிடப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏனைய வேத நூல்கள் போன்று இதில் எவ்வித மனித கையாடல்களோ செருகல்களோ கிடையாது. அல் குர்ஆனிலே உள்ள அத்தனை வசனங்களும் அல்லாஹ்வினால அருளப்பட்டவையாகும். மேலும் ஏனைய வேத நூல்கள் போன்று காலத்திற்கு காலம் மாறுவதும் கிடையாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் உள்ள அதே வேத வசனங்களே இன்றும் ஓதப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன.

மேலும் அல் குர்ஆனிலே எத்தகைய கருத்து பிழைகளோ, எழுத்து பிழைகளோ கிடையாது. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இஸ்லாத்தின் எதிரிகள் காலத்திற்கு காலம் அல் குர்ஆனிலே அறிவு ரீதியாகவும் எழுத்து ரீதியாகவும் பிழைகள் உள்ளன என்று கூறி நிரூபிக்க முயற்சி செய்து இறுதியில் தோல்வியையே தழுவி சென்றுள்ளனர்.

அவ்வாறு யாரேனும் ஒருவர் கூறினால் உண்மையில் அவர் ஒரு முஸ்லிம் அல்ல. ஒன்றில் இறை நிராகரிப்பாளர். அல்லது வழி கேடர் ஆவார். ஏனெனில், அல்லாஹ் அல் குர் ஆனிலே இவ்வாறு கூறுகிறான்.

"நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்" (அல் குர்ஆன் 15:09)

அதன்படி, அல் குர்ஆனிலே பிழை உள்ளது என்று கூறுபவர் உண்மையில் அல்லாஹ்வின் வார்த்தையை நிராகரிப்பவராவார்.

No comments:

Post a Comment

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் மௌலவி அலி அக்பர் உமரி அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா இன்றைய கால கட்டத்தில் ப...